தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மழையால் முளைக்கத் தொடங்கிய நெல் மணிகளைப் பார்வையிட்ட வி.கே.சசிகலா விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அந்த வகையில் ஒரத்தநாடு அடுத்த பின்னையூர் கிராமத்தில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து நெற்பயிர்கள் விற்பனை செய்ய முடியாததால் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்குச் சென்ற வி.கே.சசிகலா சேதமடைந்த நெல் மணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து அதுகுறித்த குறைகளை விவசாயிகளிடம் வி.கே.சசிகலா கேட்டறிந்தார்.
















