தீபாவளி பண்டிகையையொட்டி கனடா அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது கனடாவில் இந்திய வம்சாவளியினர் 18 லட்சம் பேரும், இந்தியர்கள் 10 லட்சம் பேரும் உள்ளனர்.
இங்குக் கடந்த 20-ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கனடாவின் பன்முக கலாச்சார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இதில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தீபாவளி என்ற வார்த்தையுடன், பாரம்பரிய ரங்கோலி படமும் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாகக் கனடா அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கனடாவின் பன்முக கலாச்சார கட்டமைப்பை அங்கீகரிக்கும் வகையில், தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கால் பாதிக்கப்பட்ட இந்தியா – கனடா உறவு, தற்போது மீண்டும் சீரடைந்து வருகிறது.
















