இந்திய ரயில்கள் குறைந்த விலையில் சிறந்த வசதியையும், தனியுரிமையையும் வழங்குவதாகக் கூறிய ஸ்காட்டிஸ் இன்புளூயன்சரின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்சர் ஒருவர், இந்தியாவின் முதல் தர முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு வந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் எளிமையான முறையில் பரிசோதனை செய்துவிட்டு ஒரு நிமிடத்துக்குள்ளாகவே அங்கிருந்து நகர்ந்தார்.
இதனால் வியப்படைந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர், எளிமையான டிக்கெட் சரிபார்ப்பு முறைகுறித்து புகழ்ந்து தள்ளினார்.
ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு செல்ல இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் ரூபாய் செலுத்தியபோதும் மற்றொருவரின் அருகில் அமர்ந்திருக்கும் நிலை ஏற்படும் எனக் கூறிய அவர், இந்தியாவில் தனக்கு விசாலமான இடவசதியுடன் கூடிய படுக்கை வழங்கப்பட்டதாகக் கூறினார்.
ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்தியாவின் முதல் தர வகுப்பு பெட்டிகள்குறித்து புகழ்ந்து வருகின்றனர்.
அதே சமயம் நடுத்தர மக்கள் பயணிக்கும் முன்பதிவில்லாத பெட்டிகளில் மேலும் பல வசதிகளை ஏற்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















