சீனாவில் அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் சுமார் 1 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ வரவேற்பை பெற்றுள்ளது.
உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை அதிகம் கொண்ட நாடு சீனா. கடந்தாண்டு நிலவரப்படி சீனாவில் இயந்திர மனிதர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 3 மடங்கு அதிகம் ஆகும். இருப்பினுஇங்குத் தயாரிக்கப்படும்ம் ரோபோக்கள் அனைத்துமே விலை அதிகமாக இருந்ததால் அனைவராலும் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியவில்லை.
இதனால் பெய்ஜிங்தளமாகக் கொண்டண்ட நோட்டிக்ஸ் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம், சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் எர்த் என்ற ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டு வேலைகளை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அனைவரும் வாங்கும் வகையில் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோ, ரோபோட்டிக்ஸ் துறைக்கே ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
















