டெல்லியில் நகைக்கடை பணியாளரின் கவனத்தை திசைதிருப்பி, திருடிய தங்கநகைக்கு பதிலாகப் போலி நகைகளை வைத்த பெண்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
டெல்லியின் லட்சுமிநகரில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றுக்கு பெண்கள் இருவர் சென்றுள்ளனர். அவர்கள் தங்க மோதிரம் கேட்கவே, கடை ஊழியர் நகைகளை எடுத்து வரிசையாகக் காட்டியுள்ளார்.
அப்போது ஊழியரின் கவனம் திசை திரும்பியதை பயன்படுத்தி, தங்க மோதிரத்தை திருடி விட்டு, அதற்குப் பதிலாக போலி நகையை வைத்துள்ளனர்.
நல்வாய்ப்பாக இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது திருட்டில் ஈடுபட்ட பெண்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















