குஜராத் மாநிலம், பாலிதானாவில் நடைபாதையில் சுற்றித்திரிந்த பெண் சிங்கமொன்று மனிதர்களைச் சீண்டாமல் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
குஜராத்தின் பாலிதானா நகருக்கு அருகில் ஜைனர்களின் புனித ஸ்தலமான சத்ருஞ்சய் மலை அமைந்துள்ளது. மலைஉச்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம்போல் பக்தர்கள் சத்ருஞ்சய் மலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாகப் பெண் சிங்கமொன்று யாரையும் சீண்டாமல் உலா வந்தது.
இதனை அவ்வழியாகச் சென்ற பக்தர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வனப்பகுதியின் வழியே புனித பயணம் மேற்கொள்ளும் ஜைன பக்தர்கள், வனவிலங்குகளைச் சீண்டாமல் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
















