திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதம் வரை உள்ளது என மத்திய குழு தெரிவித்துள்ளது.
நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து மத்திய குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு உறுப்பினர் மணிகண்டன், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதம் வரை உள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
















