சென்னையில் கோடைகாலத்தை விட்டு விட்டுக் கொட்டும் மழையில், தார்சாலை போடுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதால் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், அசோக் நகர் பகுதியில் கொட்டும் மழையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கோடை காலத்தில் பணிகளைச் செய்யாமல், மழைக்காலத்தில் யாருக்கும் உதவாத வகையில் எதற்குச் சாலை அமைக்கிறார்கள் என்றும், மழையில் அமைக்கும் சாலை தரமாக இருக்குமா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தரமான சாலைகளை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















