திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
குட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவகுமாருக்கு சொந்தமான வீட்டில் கௌதம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கௌதம் அடிக்கடி மதுஅருந்திவிட்டு குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததால், வீட்டைக் காலிசெய்யுமாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கட்டையைக் கொண்டு விவசாயி சிவக்குமாரை, கௌதம் தாக்கியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
















