நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டப்பகலில் கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம் பட்டணம் சாலையில் இளைஞர்கள் 5 பேர், கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்தனர்.
மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த காவல் தடுப்புகளை கீழே தள்ளி, அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் ரியாஸ்துன், அஜ்புதீன், பாபு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடி 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
















