சென்னை மணலி புதுநகரில் ஆயிரம் ரூபாய் பந்தயத்திற்காகக் கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் நீரில் மூழ்கி மாயமாகினர்.
உபரி நீர் திறப்பு காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் இருகரையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தநிலையில் சென்னை மாதவரத்தை சேர்ந்த ராஜா, மூர்த்தி உள்ளிட்டோர் மதுபோதையில் இடையஞ்சாவடியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது நண்பர்கள் ஆற்றில் குதிக்க ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டியுள்ளனர். இதையடுத்து ஆற்றில் குதித்த ராஜா, மூர்த்தி ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், மாயமான இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















