சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார்.
பட்டினப்பாக்கம் சீனிவாசன் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இக்கட்டடம் தற்போது பழுதடைந்த நிலை இருக்கிறது.
இந்தநிலையில் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட குடியிருப்பு வாசிகள், மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதேபோல் குடியிருப்பில் உள்ள பல வீடுகளில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும் விபத்தைத் தவிர்க்க உடனடியாகத் தங்களுக்கு மாற்று வீடுகளை வழங்க வேண்டுமென அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















