காசாவில் எஞ்சிய பிணை கைதிகளின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, சிறைப்பிடிக்கப்பட்டு உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களை, இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 18 பிணைக் கைதிகளின் உடல்கள் ஹமாஸிடமிருந்து இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இஸ்ரேலிலிருந்து 195 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















