டெல்லியில் இந்திய ராணுவம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ராணுவ வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய இராணுவத்தின் வீரத்தையும், தேசப் பற்றையும் கொண்டாடும் வகையில் சௌர்ய வீர்- ரன் ஃபார் இந்தியா மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற 79வது மாரத்தான் ஓட்டத்தை ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ராணுவ அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
















