நாகை அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோயிலில், சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தார் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
நாகை அருகே சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோயில் உள்ளது. இங்குச் சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது முருகப்பெருமான் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிர்த்ததைப் பார்த்துப் பக்தர்கள் அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.
















