இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட் நகரில், இந்திய வம்சாவளி பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வால்சல் நகரின் பார்க் ஹால் பகுதியில், 20 வயதான இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தப் பாலியல் குற்றச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியைப் பிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், அந்த பகுதியில் இருந்து கறுப்பு நிற உடை அணிந்த ஒருவர் வெளியேறிய காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இனவெறி காரணமாக இந்தப் பாலியல் குற்றச்சம்பவம் அரங்கேறி இருப்பதாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
















