கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியும் காதலிப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் பாரிஸில் இருவரும் சுற்றித்திரிந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியும் டேட்டிங் செய்வதாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இருவருமே காதல் குறித்து வாய் திறக்காத நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்தில் ஜஸ்டின் ட்ரூடோவும், கேட்டி பெர்ரியும் படகில் முத்தமிட்டுக் கொண்ட காட்சிகள் வெளியாகின.
இருப்பினும் அந்தக் காட்சிகளில் இருப்பது அவர்கள் இல்லை எனவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பாரிஸில் உள்ள கேப்ரே திரையரங்கத்திற்கு ஜஸ்டின் ட்ரூடோவும், கேட்டி பெர்ரியும் ஒன்றாகக் கைகோர்த்து சென்றுள்ளனர்.
ஜஸ்டின் ட்ரூடோவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவர்கள் அங்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இருவரும் டேட்டிங் செய்வது உறுதியான நிலையில், விரைவில் அவர்கள் தங்கள் காதல் மற்றும் திருமணம்குறித்து பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
















