உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகச் சூர்யகாந்த்தை நியமிக்க மத்திய அரசுக்குத் தற்போதைய தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாகக் கடந்த மே 14ம் தேதி பி.ஆர்.கவாய் பதவியேற்றார். பி.ஆர்.கவாயின் பதவி காலம் நவம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகச் சூர்யகாந்த்தை நியமிக்க மத்திய அரசுக்குத் தற்போதைய தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த நீதிபதி சூர்யகாந்த் 2019 மே 24ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
2027 பிப்ரவரி 9ஆம் தேதி வரை பதவிகாலம் உள்ளதால் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றிய நீதிபதிகளில் ஒருவராக நீதிபதி சூர்யகாந்த் பெருமையைப் பெறுகிறார்.
















