காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோயிலில் கந்தசஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
காஞ்சிபுரம் நிமெந்தகார தெருவில் பழனி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் கந்த சஷ்டி விழா புதன் கிழமை தொடங்கியது.
தொடர்ந்து விழாவின் 5 ஆம் நாளையொட்டி ஒருவர் உடம்பில் 108 வேல் தரித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். மேலும் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
















