புகழ்பெற்ற BTS பாடல் குழுவினர், அடுத்த ஆண்டு இந்தியா வருகை தருவதாக வெளியான செய்தியால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தென்கொரியாவின் BTS இசைக்குழுவினருக்கு, பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் ஏராளம். அதில் இந்தியாவும் விதி விலக்கல்ல.
இப்படிப்பட்ட சூழலில் தான் உலகம் முழுவதும் 65 இடங்களில் கான்செர்ட் நடத்த BTS குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி மும்பைக்கும் வருகை தருவதாக வெளியான செய்தி இணையத்தில் தீயாய் பரவு வருகிறது.
இந்தியாவில் கான்செர்ட் நடத்துமாறு இணையத்தில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஹேஷ்டேக் ட்ரெண்ட செய்து வரும் நிலையில், இந்தச் செய்தி அவர்களைக் குதூகலம் அடைய செய்துள்ளது.
















