டெல்லியில் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் சரிதா விஹாரில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டுமானத்திற்கு எதிராக ரகுராஜ் சிங் என்பவர் போராட்டம் நடத்தினார்.
அப்போது மோஹித் என்ற நபர் இரும்பு கம்பியைக் கொண்டு ரகுராஜ் சிங்கை சரமாரியாகத் தாக்கினார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதில் ரகுராஜ் சிங் படுகாயமடைந்த நிலையில் தப்பியோடிய மோஹித் மீது வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்த விஹார் பேருந்து நிலையத்தில் அவரை கைது செய்தனர்.
















