காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் திடீரெனச் சாலை பெயர்ந்து சேதமானதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் இருந்து திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தான்தோன்றி அம்மன் கோயில் அருகே சாலையின் ஒரு பகுதி திடீரெனப் பெயர்ந்து சேதமானது.
இதையடுத்து அப்பகுதியில் உடனடியாகப் பேரிகார்டு அமைக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்கப்படுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
















