சூடானின் முக்கிய நகரத்தைக் கைப்பற்றியதாகக் கிளர்ச்சி குழு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதலால் உள்நாட்டு போர் வெடித்தது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். இந்தச் சூழலில், மேற்கு நகரமான எல்-ஃபாஷரை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகக் கிளர்ச்சிக் குழு கூறியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
















