உலக நன்மை வேண்டி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக உதாசின் வேஷ் சமிடி சுவாமி கர்ஷினி அனுபாவானந்த், திருக்கழுக்குன்றம் அகஸ்திய கிருபா குருநாதர் அகஸ்திய ஸ்ரீ அன்புச்செல்வன் ஆகியோர் பங்கேற்று சிறப்புப் பூஜை செய்தனர்.
பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அகஸ்திய கிருபா குருநாதர் அகஸ்திய ஸ்ரீ அன்புச்செல்வன், உலக நன்மை வேண்டியும், நோய், கடன் தொல்லை அகலவும் இந்த மகாலட்சுமி பூஜை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
















