மருது சகோதரர்களின் 224வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருது சகோதரர்களின் 224வது குருபூஜை நிகழ்ச்சி விமரிசையாகத் தொடங்கியது.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் தலைமையில் யாகசாலை அமைக்கப்பட்டு வேதங்கள் முழங்கக் குருபூஜை தொடங்கிய நிலையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
குருபூஜை நிகழ்ச்சியில் தென்மாவட்டங்களை சேர்ந்த சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றுள்ளதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களில் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரச்னைக்குரிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















