உலகின் ஆபத்தான சாலை பெங்களூர் நகரத்தில் அமைந்திருப்பதாக இணையவாசி ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூருவின் ஒயிட்பீல்டு பகுதியில் பிரதான சாலை குண்டும் குழியுமாக அலங்கோலாமாகக் காட்சியளிக்கிறது.
மழை பெய்திருந்ததால், சாலை சேறும் சகதியுமாகக் காட்சியளிக்க, மக்கள் மனதுக்குள் புலம்பியபடியே வாகனங்களை இயக்கி வந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர், சாலையின் நிலையை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
குறிப்பாக, இன்ச் டேப்வை வைத்து, பெரிய பள்ளம் ஒன்றை அளவிட்ட அவர், 117 இன்ச் நீளத்திற்கா பள்ளம் இருப்பது என வேதனையுடன் தெரிவித்தார்.
உலகின் ஆபத்தான சாலை பெங்களூரு நகரத்தில் தான் இருக்கிறது என அவர் கிண்டலடித்து வெளிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
















