திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞரைத் தீயணைப்புத் துறையினர் படகுமூலம் பத்திரமாக மீட்டனர்.
ஜவ்வாது மலையில் பெய்த கனமழை காரணமாகச் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்போது குளிக்க இறங்கிய இளைஞர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரைத் தீயணைப்பு வீரர்கள் படகுமூலம் பத்திரமாக மீட்டனர்.
















