நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த வேல் பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தனர்.
விஷ்வ இந்து பரிஷத் நாகை மாவட்ட தலைவர் கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அகில உலக விஷ்வ இந்து பரிஷத் இணை செயலாளர் ஸ்தாணுமாலயன் சிறப்புரை ஆற்றினார். இதில் 100க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, கந்த சஷ்டி வேலுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மலர அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் தென் தமிழகம் மாநில இணை செயலாளர் துரை செந்தில் முருகன், தஞ்சை கோட்ட செயலாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















