காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேலை எடுத்து செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிள்ளையார்பாளையம் முடவன் வீதியில் இருந்து விஷ்வ இந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை விமரிசையாக தொடங்கியது.
குமரன் கோட்டத்தில் வேல் யாத்திரை நிறைவடைந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேலை எடுத்து செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கோயில் வாசலில் வேலை வைத்து கற்பூரம் ஏற்றி வேல் யாத்திரையை நிறைவு செய்தனர்.
















