திருமண மோசடி புகார் தொடர்பாக சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் 2வது முறையாக சென்னை மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகினர்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 2வது முறையாக மாநில மகளிர் ஆணையத்தில் இருவரும் தனித்தனியாக ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அவர்களிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிசில்டா, வரும் வெள்ளிக்கிழமை அன்று, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தற்போது விசாரணை நியாயமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
















