சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூரில் இருந்து அக்கரை செல்லும் கே.கே.பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த சாலையை ஒரு வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் தற்போது பெய்த மழையால் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
















