ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், அரசியல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோரின் பெயர் பீகார் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.
பீகாரில் உள்ள கர்கஹார் சட்டமன்ற தொகுதியிலும், மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூரிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பது குறித்து பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
















