வியட்நாமின் ஹியூ நகரின் முக்கிய நீராதாரமான வாசனை ஆறு அபாய அளவைத் தாண்டியதால், நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நகரின் சாலைகள் அனைத்தும் நீருக்கடியில் சென்றதால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதுடன், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க படகுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் தோள்களில் சுமந்து சென்று காப்பாற்றினர்.
குடியிருப்பு பகுதிகளில் ஒரு ஆள் முழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நகரமெங்கும் பேரிடர் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. குடியிருப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















