கரீபிய கடலில் உருவான ‘மெலிஸா’ புயல் ஜமைக்கா நாட்டை சின்னாபின்னமாக சிதைத்துள்ளது.
ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக ‘மெலிஸா’ புயல் தாக்கியது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே, மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த மெலிஸா புயலால் ஜமைக்கா உருக்குலைந்தது. குறிப்பாக, சாண்டா குரூஸ் நகரம் பேரழிவை சந்தித்துள்ளது.
வசிப்பிடம் எதுவென்றே தெரியாத அளவுக்கு காட்டாற்று வெள்ளம் ஓடுவதால், அங்கு வாழ்ந்தவர்களின் கதி என்னவென்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ள நிலையில், ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
















