முப்பதாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு எடுத்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏஐ பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஐடி துறையில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் குறிப்பாக டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை கணிசமான எண்ணிக்கையில் நீக்கி வருகின்றன.
இந்த நிலையில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அமேசானும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இதில் 10 சதவீத ஊழியர்களே பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அமோசான் கூறியுள்ளது. 2022ம் ஆண்டு முதல் ஊழியர்கள் 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்த இந்தப் பணி நீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
















