அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னி லேண்டில் ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்பட்டது.
செல்டிக் திருவிழாவான ‘சம்ஹைன்’ என்பது அறுவடை காலத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு பண்டிகையாகும். மேலும் இந்த நாளில் பேய்கள் மற்றும் ஆவிகள் உலகிற்கு வரும் என்று நம்பப்பட்டது.
காலப்போக்கில், இது ஒரு மதச்சார்பற்ற கொண்டாட்டமாக மாறி, பல்வேறு விதமான வேடிக்கையான அம்சங்களை உள்ளடக்கியது. முக்கியமாகப் பூசணிக்காய்களை முகங்கள் போன்று வடிவமடைத்து, விளக்குகள் ஏற்றி வைப்பார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா, கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்டில் ஹாலோவீன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இம்மாத இறுதி வரை நடைபெறும் திருவிழாவை ஒட்டித் திகிலூட்டும் வகையில் விதவிதமான அணிவகுப்புகள் நடைபெற்றன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்லாயிரக் கணக்கானோர் ஹாலோவீன் திருவிழாவில் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















