மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த மருத்துவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய நிதியினை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள், கொரோனா காலத்தில் அரசு அறிவுறுத்தல் வழங்காத நிலையிலும், ஏராளமான மருத்துவர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததை நாம் மறக்கக் கூடாது எனத் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தைத் தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒட்டுமொத்த மருத்துவ சேவைக்கான பொது பிரச்சினையாக அணுக உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
எனவே இது தொடர்பாக விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், மருத்துவர்களை நாம் பாதுகாக்கவில்லை எனில் சமூகம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது என்றும் கருத்து தெரிவித்தனர்.
















