தென் கொரியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தருவதற்கு முன்னதாக, வட கொரியா போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31 நவம்பர் 1 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தென் கொரியாவுக்கு வருகை தருவதற்கு முன்னதாக வடகொரியா மஞ்சள் கடலில் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
மஞ்சள் கடலில் இருந்து தரைக்கு இலக்கு நிர்ணயித்து ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், வடகொரியாவின் ஏவுகணை சில நிமிடங்களில் வானில் பறந்து இலக்கை அழிக்கும் வல்லமை பெற்றது எனக் கூறப்பட்டுள்ளது.
















