சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 138வது கேன்டன் கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியே கேன்டன்.
இது குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. உள்நாடு மற்றும் சர்வதேச வணிகர்களுக்குத் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயவும் உதவுகிறது.
பிரமாண்ட கண்காட்சியில் ரோபோடிக் சுவர் ஓவியங்கள், ஓடுகள் அமைக்கும் ரோபோக்கள், செங்கல் அடுக்கும் இயந்திரங்கள், AI-ஆல் இயங்கும் 3D அச்சிடும் கட்டுமான அமைப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ரோபோக்கள், தொழிலாளர் செலவுகளைச் சேமிக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள், அறிவியலின் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண் முன் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.
















