வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், வெளியேறும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
முன்பு அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டுமே இருந்த இந்த நடைமுறை, தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
முதியவர்கள், சிறுவர்கள் என யாருக்கும் விலக்கின்றி, அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை வரும் டிசம்பர் 26 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















