தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் நடைபெற்ற ஊழலுக்குப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல் துறையில் பணி வழங்க 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம், நீர் வழங்கல் துறையில் நடந்துள்ள மாபெரும் ஊழலை அமலாக்கத்துறை வெளிக்கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், 35 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க முடியாததால் ஆயிரக்கணக்கான தகுதியுள்ள இளைஞர்களுக்குப் பணி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்குப் பணி ஆணையை வழங்கிய ஸ்டாலின், நேர்மையான முறையில் பணி நியமனம் நடந்தது போல நாடகமாடியுள்ளதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, சிபிஐ விசாரணை மூலமாக மட்டுமே இந்த மாபெரும் ஊழலில் நீதி நிலைநாட்டப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.
















