அமெரிக்காவில் காவலரைச் சுட்டுக் கொன்று விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற நபரை விடாமல் துரத்திச் சென்ற போலீசார் விபத்தில் சிக்கியவரை கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எங்குப் பார்த்தாலும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இதனால் அமெரிக்காவில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தச் சூழலில், கலிபோர்னியாவில் துப்பாக்கிய ஏந்திய நபர் பெண் ஒருவரை மிரட்டிக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த காவலர் ஆண்ட்ரூ நுனேஸ் என்பவர், அந்த நபரைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த நபர், காவலரைத் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தப்பிப்பதற்காக அதிவேகமாகச் சென்ற நபர் அருகே வந்த கார் மீது மோதி கீழே விழுந்தார்.
உடனே சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தனர். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடைபெற்ற சேஷிங் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
















