குருநானக் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக 2100 சீக்கியர்களுக்குப் பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் வரும் 4-ம் தேதி முதல் 13-ம் தேதிவரையில் குருநானக் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இதில் கலந்து கொள்ள இந்தியாவை சேர்ந்த 2100 சீக்கியர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.
முன்னதாகப் பாகிஸ்தானுக்கு இந்திய சீக்கியர்கள் செல்ல அனுமதியளித்திருந்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நன்றி தெரிவித்திருந்தார்.
















