கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் தர்ஷன் சிங் சஹாசி கொல்லப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
தர்ஷன் சிங் சஹாசி கனடா மற்றும் இந்தியாவில் பலராலும் அறியப்பட்ட ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
அங்குச் செங்கல் சூளை நடத்தி வந்த அவர், 1991இல் கனடாவின் வான்கூவருக்கு குடிபெயர்ந்தார். தொடர்ந்து அங்கு உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை நிறுவினார்.
பிரபலமான தொழிலதிபராகத் திகழ்ந்த அவர் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து அவர் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. கொலைக்குப் பொறுப்பேற்று பிஷ்னோய் கும்பல் உறுப்பினர் கோல்டி தில்லான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
















