புனேவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மென் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா ஆன்லைன் மூலம் மகாராஷ்டிராவில் செயல்படுவதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் புனேவின் பல இடங்களில் கடந்த 9ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
தொடர்ந்து கோந்துவா பகுதியில் வசித்து வரும் மென்பொறியாளர் ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது 19 லேப்-டாப்கள் மற்றும் 40 செல்போன்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஜூபைர் ஹங்கர்கேகர் அல்கொய்தா தொடர்பான ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் அவர், அல்கொய்தாஅமைப்புடன் தொடர்பில் இருந்ததும் அம்பலமானது.
அதேபோல் அவரது லேப்டாப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களில் AK-47 ரைபிள்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான வழிமுறைகளும் இருந்துள்ளன.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
			 
                    















