வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.
அதன்படி வருமான வரி தணிக்கை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை டிசம்பர் 10ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
















