செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பிதால் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் அதன் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியும் நிரம்பியது.
கல்குவாரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மழைநீர் வரும் கால்வாய்களில் கழிவுநீர் வந்ததால் கல்குவாரி முழுவதுமாக மாசடைந்து நீர் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கல்குவாரிக்கு வரும் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் கல்குவாரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் என அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், கல்குவாரியில் கணிசமாக அளவிற்கு நீர்தேக்கி வைக்க தடுப்புகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
















