தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காரை நிறுத்தி மாணவர்களுடன் சிலம்பம் சுற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதையொட்டி கீழ சுரண்டை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், காரில் இருந்து இறங்கி மாணவி ஒருவரிடம் சிலம்பத்தை வாங்கி சுற்றினார். இதனை அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
















