வெள்ளப்பெருக்கு காரணமாகத் தேனியில் உள்ள மேகமலை அருவிக்குச் செல்ல 13வது நாளாகத் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோம்பைதொழு அருகே உள்ள மேகமலை அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவிக்குச் செல்லவும், குளிக்கவும் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.
அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரையிலும், சேதமான பாதுகாப்பு வேலிகள் சீரமைக்கப்படும் வரையிலும் தடை தொடரும் என உத்தரவிடப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கான தடை 13வது நாளாகத் தொடர்கிறது.
















