தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை, சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்கொரியாவின் புசான் நகரின் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள்குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
















